For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சீனா ஓபன் டென்னிஸ் : சாம்பியன் பட்டம் வென்றார் #CarlosAlcaraz

08:28 PM Oct 02, 2024 IST | Web Editor
சீனா ஓபன் டென்னிஸ்   சாம்பியன் பட்டம் வென்றார்  carlosalcaraz
Advertisement

சீனா ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில், யானிக் சின்னரை வீழ்த்தி காா்லஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.

Advertisement

சீனா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி பீஜிங் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) - ஜன்னிக் சின்னெர் (இத்தாலி) ஆகியோர் மோதினர். தொடக்கம் முதலே இருவரும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தனர். இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 7-6 (8-6) என்ற புள்ளிக்கணக்கில் ஜன்னிக் சின்னெர் வென்ற நிலையில், 2வது செட்டை 6-4 என்ற புள்ளிக்கணக்கில் அல்காரஸ் கைப்பற்றினர்.

இதையும் படியுங்கள்: நானிக்கு ஜோடியாகும் #KGF பட நடிகை?

இதனைத் தொடர்ந்து, வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது செட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் அல்காரஸ் ஆதிக்கம் செலுத்தி சிறப்பாக விளையாடி வந்தார். இறுதியில் பரபரப்பாக நடைபெற்ற 3வது செட்டை 7-6 (7-3) என்ற புள்ளிக் கணக்கில் அல்காரஸ் கைப்பற்றினார். இதன்மூலம் சின்னெரை வீழ்த்தி அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.

Tags :
Advertisement