Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஓய்வு வயது வரம்பை உயா்த்த சீனா முடிவு! என்ன காரணம் தெரியுமா?

01:03 PM Jul 24, 2024 IST | Web Editor
Advertisement

சீனாவில் வயதானவா்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் சூழலில், பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கான வயது வரம்பை உயா்த்த அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

Advertisement

சீனாவில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அங்கு ஐந்தில் ஒருவர் அறுபது வயதுக்கு மேற்பட்டவராகும். இந்நிலையில், சீனாவில் வயதானவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கான வயது வரம்பை உயா்த்த அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

கடந்த 1949ம் ஆண்டு 36 ஆண்டுகளாக இருந்த சீனா்களின் சராசரி ஆயுள் தற்போது 78 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. இந்த 75 ஆண்டுகளாக ஓய்வு பெறுவதற்கான வயது ஆண்களுக்கு 60, பெண்களுக்கு 55 (உடலுழைப்புத் தொழிலுக்கு 50 வயது) என்ற நிலையில் மாற்றமில்லை. இதனால் அங்கு ஓய்வூதியம் பெறுவோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது.

இதையும் படியுங்கள் : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் சம்போ செந்தில் எங்கே? வெளிநாடு தப்பிச் சென்றதாக தகவல்!

இந்த நிலையில், மாறிவரும் சூழலுக்கு ஏற்ப ஓய்வு வயது வரம்பை இன்னும் 5 ஆண்டுகளில் படிப்படியாக அதிகரிக்கவிருப்பதாக  சீனா அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ஓய்வு பெறுவதற்கான வயது வரம்பு 65-ஆக உயரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

Tags :
chinaelder peoplegovernmentincreasesraiseretirement age
Advertisement
Next Article