For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பராமரிக்க மறந்த பிள்ளைகள்... ரூ.23 கோடி சொத்துக்களை வளர்ப்பு நாய், பூனைக்கு எழுதி வைத்த தாய்...

07:46 PM Jan 27, 2024 IST | Web Editor
பராமரிக்க மறந்த பிள்ளைகள்    ரூ 23 கோடி சொத்துக்களை வளர்ப்பு நாய்  பூனைக்கு எழுதி வைத்த தாய்
Advertisement

சீனாவில் தனது பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை தான் வளர்க்கும் நாய் மற்றும் பூனைகள் மீது மூதாட்டி ஒருவர் எழுதி வைத்துள்ளார். இது அவரது பிள்ளைகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

சீனாவில் ஷாங்காய் நகரை சேர்ந்தவர் லியூ. மூதாட்டியான இவர் தனக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை தனது 3 பிள்ளைகளும் பங்கிட்டுக்கொள்ளும் வகையில் உயில் எழுதி வைத்தார். ஆனாலும் அந்த பெண் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட போது அவரது பிள்ளைகள் 3 பேரும் ஒரு முறை கூட வந்து பார்க்கவில்லை. இது லியூவுக்கு அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியது.

இதனால் ஆவேசம் அடைந்த அவர் தனது உயிலை மாற்றி எழுதி சொத்துக்கள் அனைத்தையும் தான் வளர்க்கும் நாய் மற்றும் பூனைகள் மீது எழுதி வைக்க திட்டமிட்டுள்ளார். இதையறிந்த அவரது பிள்ளைகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆனால் இதுபோன்ற செயல்களுக்கு அந்நாட்டு சட்டத்தில் இடமில்லை என்பதால், அவர்கள் நம்பிக்கையான ஒருவரை தேர்ந்தெடுத்து கால்நடை மருத்துவமனை ஆரம்பித்து நாயையும், பூனையையும் நன்கு பராமரிக்க ஒரு விலங்குகள் நல நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் பயனர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Tags :
Advertisement