For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை: டிஜிசிஏ உத்தரவு!

12:32 PM Apr 24, 2024 IST | Web Editor
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை  டிஜிசிஏ உத்தரவு
Advertisement

விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்குநரகம் (டிஜிசிஏ) அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

உலகில் விமான போக்குவரத்து வேகமாக வளரும் நாடுகளில் ஒன்றாக உள்ள இந்தியாவில், உள்நாட்டு விமான போக்குவரத்தும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், விமானங்களில் பயணிக்கும் 12 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுடன் இருக்கை ஒதுக்கப்படுவதில்லை என்று புகார் எழுந்தது. இது தொடர்பாக விமான போக்குவரத்து தலைமை இயக்குநரகம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.

விமான போக்குவரத்து தலைமை இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது :

"விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஒருவருடன் இருக்கை  ஒதுக்கப்படுவதை விமான நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். மேலும் அதற்கான பதிவேடு பராமரிக்கப்படும்"

இவ்வாறு விமான போக்குவரத்து தலைமை இயக்குநரகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் : சூடுபிடிக்கும் தேர்தல் களம்.. ஜம்மு – காஷ்மீரில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு.. – களத்தில் நியூஸ்7 தமிழ்!

இது தொடர்பாக ஒழுங்குமுறை ஆணையம் ஆலோசனை வழங்கி உள்ளது. சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் பூஜ்ஜிய சாமான்கள், முன்னுரிமை இருக்கைகள், உணவு, பானங்கள் மற்றும் இசைக்கருவிகளின் வண்டி போன்ற சேவைகளுக்கான கட்டணங்களையும் அனுமதித்துள்ளது.

Tags :
Advertisement