Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கணவருக்கு பதிலாக குழந்தைகள் ஓய்வூதியம் -மத்திய அரசு அனுமதி!

10:10 AM Jan 03, 2024 IST | Web Editor
Advertisement

கணவரிடம் இருந்து பிரிந்து வாழும் அரசு பெண் ஊழியர்கள்,  குடும்ப ஓய்வூதியம் பெற கணவருக்கு பதிலாக தங்களது குழந்தைகளின் பெயரை பரிந்துரைக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

Advertisement

மத்திய சிவில் சர்வீசஸ் விதிகளின்படி, ஒரு அரசு பெண் ஊழிழரோ அல்லது ஓய்வூதியம் பெறும் அரசு ஊழியரோ மரணம் அடைந்தால்,  அவர்களின்  ஓய்வூதியம் அவர்களின் கணவருக்கு வழங்கப்படுகிறது.  இதன் பின்,  மனைவி அல்லது கணவர் உயிரிழந்தால், அவர்களது குழந்தைகள் குடும்ப ஓய்வூதியத்தை பெற தகுதி பெறுகின்றனர்.

இந்நிலையில்,  ஓய்வூதியம் பெற கணவருக்கு பதிலாக குழந்தைகளை பரிந்துரை செய்யலாம் என ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர்கள் நலத்துறை அரசு பெண் ஊழியர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இதுகுறித்து ஓய்வூதிய ஆணையம் கூறியிருப்பதாவது:

விவாகரத்து வழக்கு தாக்கல் செய்திருக்கும் பெண்கள், கணவருக்கு பதிலாக தங்கள் குழந்தைகளை ஓய்வூதியம் பெற அனுமதிக்கலாமா என கேட்டு பல கடிதங்கள் அனுப்புகின்றன.  அதனால் தான் இத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன்படி,  அரசு பெண் ஊழியர் அல்லது ஓய்வு பெற்ற அரசு பெண் ஊழியர் கணவருக்கு எதிராக வரதட்சணை,  விவாகரத்து போன்ற வழக்குகள் நீதிமன்றத்தில்  நிலுவையில் இருந்தால் குடும்ப ஓய்வூதியத்தை பெற தங்களது குழந்தைகளை பரிந்துரை செய்யலாம் என கூறியுள்ளது.

Tags :
Government Female EmployeeNational Pension CommissionNews7Tamilnews7TamilUpdatespension
Advertisement
Next Article