For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“குழந்தை நேய சூழல் வகுப்பறைகளை பொலிவிழக்காது தடுக்க வேண்டும்!” - தேவநேயன் அரசு

05:00 PM Apr 09, 2024 IST | Web Editor
“குழந்தை நேய சூழல் வகுப்பறைகளை பொலிவிழக்காது தடுக்க வேண்டும் ”   தேவநேயன் அரசு
Advertisement

குழந்தை நேய சூழல் கொண்ட பள்ளி கட்டமைப்புகள் தேர்தலால் பொலிவு இழக்காது தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும் என தேவநேயன் அரசு கோரிக்கை முன் வைத்துள்ளார். 

Advertisement

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதன்படி ஏப்ரல் 19-ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் ஜூன் 1-ஆம் தேதி இறுதிகட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனை அடுத்து ஜூன் 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

இந்நிலையில், வாக்குச்சாவடி மையங்களாக பெரும்பாலும் அந்தந்த பகுதிகளில் உள்ள பள்ளிகளே செயல்பட உள்ளன. இதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் தீவிரமடைந்துள்ளன. இதற்காக பள்ளிக்கூடங்களில் உள்ள மேஜை நாற்காளிகளை இடம் மாற்றுவது, சுவர்களில் கல்வி சார்ந்து வரையப்பட்டிருந்த படங்களை மறைப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற வாய்ப்புள்ளது.

மேலும் சுமார்ட் வகுப்பறைகளை இடம் மாற்றுவது  உள்பட பள்ளிகளின் உள் கட்டமைப்புகள் பல வகைகளில் மாற்றி அமைக்கப்படுகின்றன. தன்னார்வலர்களின் ஆதரவோடு, பள்ளிகளில் செய்யப்பட்ட பல உள் கட்டமைப்புகள் தேர்தல்களின் போது சிதைவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இது தொடர்பாக குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர் தேவநேயன் அரசு தனது பேஸ்புக் பக்கத்தின் வாயிலாக தேர்தல் ஆணையத்துக்கு சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

தேவநேயன் அரசு தனது பதிவில் கூறியுள்ளதாவது:

தேர்தல் திருவிழா தொடங்கிவிட்டது. தேர்தல் ஆணையம், வாக்களிப்பதற்காக பள்ளிகளை பயன்படுத்துவது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் தேர்தல் முடிந்தவுடன் பள்ளிகளை பாழாக்கி செல்வது என்பது வழக்கமாகி வருவது தான் கொடுமை. ஒவ்வொரு பள்ளியிலும் பல லட்சம் செலவில் உருவாக்கப்பட்டுள்ள அழகிய சுவர்கள் அனைத்தும் நாசம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. பள்ளி நிர்வாகம் பல்வேறு சமூக அமைப்புகளின் துணையோடு உருவாக்கி உள்ள குழந்தை நேய சூழல் கொண்ட பள்ளி கட்டமைப்புகள் அனைத்தும் பொலிவு இழக்க வாய்ப்புள்ளது. இது கண்டிப்பாக தடுக்கப்பட வேண்டும். இதைக் கவனத்தில் கொண்டு, பள்ளிகள் பாழாகாமால் பாதுகாப்பது என்பது தேர்தல் ஆணையத்தின் முதன்மை கடமையாகும். இவ்வாறு தேவநேயன் அரசு கூறியுள்ளார்.
Tags :
Advertisement