For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் | கோவைக்கு மீண்டும் செந்தில்பாலாஜியை நியமித்து தமிழ்நாடு முதலமைச்சர் #MKStalin உத்தரவு!

12:57 PM Oct 08, 2024 IST | Web Editor
மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள்   கோவைக்கு மீண்டும் செந்தில்பாலாஜியை நியமித்து தமிழ்நாடு முதலமைச்சர்  mkstalin உத்தரவு
Advertisement

தமிழ்நாட்டில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்திட பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Advertisement

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு அமைச்சரவையில் பல்வேறு மாற்றங்கள் அறிவிக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் அமைச்சரவை கூட்டம் இதுவாகும். இந்த அமைச்சரவை கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உள்ளிட்ட அனைத்து துறை அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.

தமிழ்நாட்டில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், பொது மக்களுக்குச் சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளைக் கண்காணிக்கவும், இயற்கைச் சீற்றம், நோய்த்தொற்று இன்னபிற நேரங்களில் அவசரகாலப் பணிகளைக் கூடுதலாக மேற்கொள்ளவும் அமைச்சர்கள் சிலரை, சில மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்களாக நியமித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்கள். அதன்படி, வருவாய் மாவட்ட வாரியாக பின்வரும் அமைச்சர்கள் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

  • திருநெல்வேலி - நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என். நேரு
  • தேனி - ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி
  • திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி - பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு
  • தருமபுரி - வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
  • தென்காசி - வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்
  • கன்னியாகுமரி - நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு
  • நீலகிரி - தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன்.

இதையும் படியுங்கள் : NationalAirForceDay – பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து!

  • கிருஷ்ணகிரி - உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி
  • கோயம்புத்தூர் - மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி
  • காஞ்சிபுரம் - கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி
  • பெரம்பலூர் - போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்
  • நாகப்பட்டினம் - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
  • மயிலாடுதுறை - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோரை நியமித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்கள்.
Tags :
Advertisement