For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தூத்துக்குடி மாவட்டத்தில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நேரில் ஆய்வு!

11:12 AM Dec 23, 2023 IST | Web Editor
தூத்துக்குடி மாவட்டத்தில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நேரில் ஆய்வு
Advertisement

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதியில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று நேரில் ஆய்வு செய்தார்.

Advertisement

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட குறிஞ்சிநகர் பகுதியில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை  நடத்தினார்.

இதையும் படியுங்கள் : இந்தியாவில் 22 பேருக்கு புதிய வகை “கோவிட் ஜே.என்.1” வகை தொற்று உறுதி!

அதிகனமழை காரணமாக பாதிக்கப்பட்ட மாநகராட்சிக்குட்பட்ட பேல்பேட்டை - செல்வநாயகபுரம் சந்திப்புப் பகுதியில் உள்ள கருத்தப்பாலத்தில் ஏற்பட்ட அடைப்புகளை தூர்வாரி, மின்மோட்டர்கள் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து, தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.

இது குறித்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது;

"தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 6 நாட்களுக்கு முன் பெய்த கனமழை காரணமாக மாவட்டம் முழுவதும் தண்ணீரில் மூழ்கி வெள்ளக்காடாக காட்சி அளித்தது. இந்நிலையில்,  மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் தேங்கி நின்றிருந்த தண்ணீர் வடிந்து இயல்புநிலை திரும்பி உள்ளது.

இருந்தும் ஒரு சில தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்பு வீடுகள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் தேங்கி நிற்கும் தண்ணீர் இதுவரை வடியாமல் உள்ளது. அங்கு தேங்கி நிற்கும் தண்ணீரை ராட்சத இயந்திரங்கள் மூலம் குழாய்கள் அமைத்து வெளியேற்றம் செய்யும் பணியில் மாநகராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர். 

குறிஞ்சி நகர் பகுதியை சுற்றியுள்ள தெருக்களை சூழ்ந்து நிற்கும் காட்சியை நேரில் ஆய்வு செய்த பின் தண்ணீரை வெளியேற்ற தேவையான ஆலோசனைகளை அதிகாரிகளுக்கு வழங்கியதொடு தண்ணீர் தேங்காதவாறு வடிகால் நீரோடைகள் அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் விரைவில் அதற்கான பணிகள் துவங்கப்படும்"

இவ்வாறு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்தார்.

Tags :
Advertisement