தலைமை காஜி மறைவு - தவெக தலைவர் விஜய் இரங்கல்!
தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அய்யூப் சாகிப் நேற்று காலமானார். அவருக்கு வயது 84. அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தலைமை காஜியின் மறைவுக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள் : சாலையை கடக்க முயன்ற 7 பேர்… அடுத்த நொடி நடந்த சம்பவம் – மதுரையை உலுக்கிய கோர விபத்து!
இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,
"தமிழ்நாடு அரசு தலைமை காஜி அல்லாமா முஃப்தி Dr.முஹம்மது ஸலாஹுத்தீன் அய்யூபி காதிரி அஜ்ஹரி காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். தனது தலைமை காஜி பொறுப்பில் நேர்மையோடு அறத்தின் வழியில் பணியாற்றியவர். அரசு வழங்கிய சைரன் வைத்த கார், அரசு ஒதுக்கிய வீடு, அரசு வழங்கிய தலைமை அலுவலகம் எனத் தனது பொறுப்புக்காக அரசு வழங்கிய சலுகைகளைப் பெறாமல் சேவையாற்றியவர்.
தமிழ்நாடு அரசு தலைமை காஜி அல்லாமா முஃப்தி Dr.முஹம்மது ஸலாஹுத்தீன் அய்யூபி காதிரி அஜ்ஹரி அவர்கள் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.
தனது தலைமை காஜி பொறுப்பில் நேர்மையோடு அறத்தின் வழியில் பணியாற்றியவர். அரசு வழங்கிய சைரன் வைத்த கார், அரசு ஒதுக்கிய வீடு, அரசு வழங்கிய…
— TVK Vijay (@TVKVijayHQ) May 25, 2025
அனைவரின் நன்மதிப்பைப் பெற்ற தலைமை காஜி அல்லாமா முஃப்தி Dr.முஹம்மது ஸலாஹுத்தீன் அய்யூபி காதிரி அஜ்ஹரியைப் பிரிந்து வாடும் அவர்தம் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் இஸ்லாமியப் பெருமக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்"
இவ்வாறு தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.