Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 71வது பிறந்நாள் | பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

10:49 AM Mar 01, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Advertisement

திமுக தலைவரும்,  முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 71வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.  தனது பிறந்தநாளை முன்னிட்டு காலையில் சென்னை மெரினாவில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர்கள் அறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி ஆகியோர் நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தினார்.  அதன் பிறகு, வேப்பேரியில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள்,  திரை பிரபலங்கள், தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தலைவர்கள் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்பு,  திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு சென்றார். அங்கு தமிழகம் முழுவதில் இருந்து வந்துள்ளன திமுக தொண்டர்கள் முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த னர்.

பிரதமர் நரேந்திர மோடி:

பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில்,  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாக வாழ வாழ்த்துக்கள் என ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளார்.

மல்லிகார்ஜுன கார்கே:

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், தமிழ்நாடு முதலமைச்சரும்,  திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

பினராயி விஜயன்:

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அன்புத் தோழர் மு.க. ஸ்டாலின்.  நமது அரசியலமைப்பில் பொதிந்துள்ள ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற விழுமியங்களைப் பாதுகாப்பதில் உங்கள் உறுதியான தீர்மானம் மிகவும் ஊக்கமளிக்கிறது.  நீங்கள் முடிவில்லாத மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் தொடர்ச்சியான வெற்றிகளை நீங்கள் பெற விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன்: 

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “சமூகநீதி,  மகளிர் மேம்பாடு,  இளைஞர் நலம்,  தொழில் வளர்ச்சி என தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் செலுத்தி வரும் எனது அன்பிற்கினிய நண்பர்,  திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர்,  தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின் நீடூழி வாழ அவரது பிறந்தநாளில் வாழ்த்துகிறேன்” என தெரிவித்துள்ளார். 

தமிழிசை சவுந்தரராஜன்:

தெலங்கானா ஆளுநர் தமிழிசை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,  தமிழக முதலமைச்சர் அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.

அண்ணாமலை:

பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை  “தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  அவர் நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன் மக்கள் பணி தொடர இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

ரஜினிகாந்த்:

நடிகர் ரஜினிகாந்த், தொலைபேசி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலினை தொடர்பு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு என் இனிய பிறந் நாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார். 

 

Tags :
DMKHappy Birthday CM StalinMK Stalin
Advertisement
Next Article