Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மாநில கல்விக்கொள்கையை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின் - 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து!

முதல்வர் ஸ்டாலின் தமிழ் நாட்டிற்கான மாநில கல்விக்கொள்கையை வெளியிட்டார்.
12:53 PM Aug 08, 2025 IST | Web Editor
முதல்வர் ஸ்டாலின் தமிழ் நாட்டிற்கான மாநில கல்விக்கொள்கையை வெளியிட்டார்.
Advertisement

மத்திய அரசானது தேசிய கல்விக் கொள்கையை கடந்த 2020 ஆண்டு வெளியிட்டது. இந்த கல்விக்கொள்கையில் உள்ள பல்வேறு அம்சங்களுக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் தமிழ்நாடு அரசு, இந்த தேசிய கல்விக்கொள்கைக்கு பதிலாக மாநில கல்விக் கொள்கையை உருவாக்க முடிவு செய்தது. இதற்காக கடந்த 2022-ம் ஆண்டு பெற்ற 14 பேர் கொண்ட குழுவும் தமிழக அராசால் அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள், பெற்றோர் என பல்வேறு தரப்பினரிடமும் கருத்துகள் கேட்டறிந்து, இந்த கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. மாநில கல்விக் கொள்கைக்கான அறிக்கை  2024 ஜூலை 1-ம் தேதி தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில் பள்ளிக்கல்வித் துறைக்கான ”மாநில கல்விக் கொள்கையை” வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்,பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த கல்விக்கொள்கையில் இரு மொழி கொள்கைதான் மாநில கல்விக்கொள்கை என அழுத்தம் திருத்தமாக கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்படும் என்றும், உண்டு உறைவிட பள்ளிகள் உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முக்கிய அம்சமாக “ மாநிலக் கல்விக் கொள்கையால்  இந்த கல்வி ஆண்டு முதல்  11ஆம் வகுப்பு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
ChennailatestNewsMKStalinnep2020StateEducationPolicyTNnews
Advertisement
Next Article