ஜார்க்கண்ட் மாநிலத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பு - முதலமைச்சர் சம்பாய் சோரன் உத்தரவு!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த முதலமைச்சர் சம்பாய் சோரன் உத்தரவிட்டுள்ளார்.
பிகாரில் கடந்த ஆண்டு ஜனவரி 7 முதல் அக்டோபர் 2 வரை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. பிகாரில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பிறகு, ஜார்கண்டிலும் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என பல கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தது. ஜார்க்கண்டில் ஆளும் கூட்டணியில் உள்ள பேரவை உறுப்பினர்களும் பேரவையில் கோரிக்கை எழுப்பி வந்தது.
இதையும் படியுங்கள் : ‘டெல்லி சலோ’ விவசாயிகள் போராட்டம்: மத்திய அமைச்சர்களுடன் 4ம் கட்ட பேச்சுவார்த்தை!
இந்நிலையில், பிகார் மற்றும் ஆந்திரத்துக்கு அடுத்தபடியாக ஜார்க்கண்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதலமைச்சர் சம்பயி சோரன் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் மாநிலங்களின் வரிசையில் மூன்றாவது மாநிலமாக ஜார்க்கண்ட் உள்ளது.
இதுதொடர்பாக முதலமைச்சர் சசம்பாய் சோரன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மக்கள்தொகையில் அதிக எண்ணிக்கையில் இருப்பவர்களுக்கு அதிக பங்கு. தயாராகிறது ஜார்க்கண்ட் என்று தெரிவித்துள்ளார்.