சிகாகோவில் முதலமைச்சர் #MKStalin - தமிழர்கள் உற்சாக வரவேற்பு!
சிகாகோ சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அங்கு தமிழ்ச்சங்கத்தினர் உற்சாக வரவேற்வு அளித்தனர்.
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதலீட்டாளர்களை சந்திப்பதற்காக 17 நாட்கள் பயணமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து முதல் நாளில் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 6 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இதன் பின்னர் அமெரிக்கா நாட்டின் சான்பிரான்சிஸ்கோவில் அமெரிக்க வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். இந்த சூழலில் சான் பிரான்சிஸ்கோவில் தனது பயணத்தை முடித்துக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சிகாகோ சென்றடைந்தார்.
சிகாகோ சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிகாகோ தமிழ்ச்சங்கத்தினர் உற்சாக வரவேற்வு அளித்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் அரசு அதிகாரிகள் சென்றிருந்தனர். சிகாகோ நகருக்கு சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலதிபர்களை சந்தித்துப் பேசவுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பயணத்தை முடித்துக் கொண்டு செப்டம்பர் 14ம் தேதி சென்னை திரும்புகிறார்.