For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

482 காவல்துறையினருக்கு பதக்கங்களை வழங்கினார் முதலமைச்சர் #MKStalin!

06:18 PM Aug 23, 2024 IST | Web Editor
482 காவல்துறையினருக்கு பதக்கங்களை வழங்கினார் முதலமைச்சர்  mkstalin
Advertisement

குடியரசு தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறையினருக்கு வழங்கினார்.

Advertisement

தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை ஒவ்வொரு ஆண்டும் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மெச்சத்தகுந்த முறையில் பணியாற்றிய காவல்துறையினர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு உயரிய விருதுகளாக இந்திய குடியரசுத் தலைவர் பதக்கங்கள், மத்திய உள்துறை அமைச்சர் பதக்கங்கள் மற்றும் தமிழ்நாடு அரசு சார்பிலும் பணியின் போது சிறப்பான பணியாற்றிய காவல் துறை அதிகாரிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்படுவது வழக்கம்.

அதன்படி தமிழ்நாடு காவல்துறை சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில், இந்திய குடியரசு தலைவர் பதக்கங்கள், மத்திய உள்துறை அமைச்சர் பதக்கங்கள், தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட காவல் துறையினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண், சட்ட ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் ஐஜி, டிஐஜி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Tags :
Advertisement