Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் நேரில் சென்று பார்வையிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!!

09:57 PM Nov 14, 2023 IST | Web Editor
Advertisement

மழையால் பாதிக்கப்பட்டுள்ள நாகை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் நேரில் சென்று பார்வையிட முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement

மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள அமைச்சர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் நேற்று முதல் தொடர் மழை பெய்து வருகிறது. சில மாவட்டங்களில் கனமழை பெய்வதால் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், சென்னை அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். வெள்ள பாதிப்புகள் மற்றும் அரசு சார்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இதேபோன்று கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நாகை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆட்சியர்களிடம் காணொலி வாயிலாக முதல்வர் கேட்டறிந்தார். அதனைத்தொடர்ந்து கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் அமைச்சர்கள் நேரில் சென்று பார்வையிட முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Tags :
CMO TamilNaduMinisterMK StalinMonsoon precautionsnews7 tamilNews7 Tamil UpdatesState Emergency Control CenterTamilNadu
Advertisement
Next Article