சென்னையில் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தை முதலமைச்சர் #mkstalin ஆய்வு!
திமுக சார்பில் கனமழையையொட்டி அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
சென்னையில் நேற்று இரவில் இருந்தே கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் சென்னையின் பல பகுதிகளில் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதைத்தொடர்ந்து மழை நீரை வெளியேற்றும் பணியில் சென்னை மாநகராட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
தொடர்ந்து, மழை பாதிப்பு குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், வடசென்னையின் சில பகுதிகளுக்கு சென்று ஆய்வு நடத்தினார். அப்போது, சென்ட்ரல் அருகே உள்ள யானைக்கவுனி மேம்பாலம் அருகே உள்ள கால்வாயில் மழைநீர் தடையின்றி சென்றிட, கழிவுகளை JCB எந்திரம் மூலம் உடனுக்குடன் அகற்றும் பணியை ஆய்வு செய்தார். பின்னர், பேசின் மேம்பாலத்தில் இருந்து, காந்தி கால்வாய், ஓட்டேரி நல்லா கால்வாய் சேரும் இடமான பக்கிங்ஹாம் கால்வாயில் மழை நீர் தங்குதடையின்றி செல்கிறதா என நேரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, புளியந்தோப்பு பகுதியில் ஆய்வு செய்தபோது, அங்கு மீட்பு பணியில் இருந்த தூய்மைப் பணியாளர்களுடன் கலந்துரையாடி அவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேநீர் அருந்தினார். அப்போது, அவர்களிடம் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், உங்களுடன் முன்கள வீரனாகத் துணை நிற்பேன் என கூறினார்.
தொடர்ந்து, அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் கனமழையையொட்டி அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘War Room’-ஐப் பார்வையிட்டு, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட - பகுதி - வட்டச் செயலாளர்கள், கவுன்சிலர்கள் ஆகியோரைத் தொடர்புகொண்டு, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை முகாம்களுக்கு அழைத்துச் செல்வதோடு, அவர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளைச் செய்துகொடுத்து, நிவாரணப் பணிகளில் அரசு இயந்திரத்துக்குத் துணை நிற்குமாறு கேட்டுக் கொண்டேன். இரவு முழுதும் விழிப்புடன் பணியாற்றி, கோரிக்கைகளை ஒருங்கிணைத்து, பொதுமக்களுக்கு உதவிடுமாறு கழக நிர்வாகிகளை அறிவுறுத்தியுள்ளேன். அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள War Room எண்: 08069446900” என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் கனமழையையொட்டி அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.