Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

விஜய் கட்சி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து!

10:33 AM Feb 07, 2024 IST | Web Editor
Advertisement

“மக்களுக்கு தொண்டாற்ற யார் வந்தாலும் வரவேற்போம், மகிழ்ச்சி...”  என நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

Advertisement

தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்கவும்,  புதிய நிறுவனங்களை வரவேற்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜன. 27ஆம் தேதி ஸ்பெயின் புறப் பட்டுச் சென்றார். அங்கு நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற முதலமைச்சர், முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்தார். பிறகு நடைபெற்ற சந்திப்பு களின்போது, பிரபலமான ஹபக் லாய்டு நிறுவனத்துடன் ரூ.2,500 கோடி முதலீட்டுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

சாலை கட்டமைப்பு மேம் பாட்டு நிறுவனமான அபர்ட்டி ஸின் பன்னாட்டு மற்றும் நிறு வனத் தொடர்பு தலைமை அதி காரி லாரா பெர்ஜானோ, முதல மைச்சர் மு.க.ஸ்டாலினை சந் தித்து பேசினார். அப்போது, தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை கட்டமைப்பில் முதலீடுகளை மேற் கொள்ள அபர்ட்டிஸ் நிறுவனம் விருப்பம் தெரிவித்தது. ரோக்கா நிறுவனம் ரூ.400 கோடி முதலீடு செய்வதாக உறுதி அளித்துள்ளது.

ஆக்சியானா நிறுவனமும் முதலீடு செய்ய உறுதி அளித்தது. தொடர்ந்து, அம்போ வால்வ்ஸ் உள்ளிட்ட சில நிறுவ னங்களுடன் முதலமைச்சர் பேச்சு வார்த்தைநடத்தினார். இந்த நிறுவனங்களும் விரைவில் ஒப் பந்தம் மேற்கொள்ள உள்ளன. ஸ்பெயின் பயணத்தை முடித் துக்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது சென்னை திரும்பியுள்ளார்.

அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில்,  விஜய் அரசியல் கட்சித் தொடங்கியது குறித்த கேள்வி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கேட்கப்பட்டது.  இந்த கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், “மக்களுக்கு தொண்டாற்ற யார் வந்தாலும் வரவேற்போம், மகிழ்ச்சி.” எனத் தெரிவித்தார்.

Advertisement
Next Article