தூத்துக்குடியில் மின்சார கார் உற்பத்தி நிறுவனம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலைக்கு இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
கடந்த ஜனவரி மாதம் 7 மற்றும் 8 ஆம் தேதி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டு நடைபெற்றது. இதில் வியட்நாமைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் சார்பில் தூத்துக்குடியில் மின்சார வாகனம் மற்றும் பேட்டரி உற்பத்தி ஆலையை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதையும் படியுங்கள் : டிஜிட்டல் தளங்கள் நம்பகத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் - பிரதமர் மோடி குறித்த ‘ஜெமினி ஏஐ’ கருத்துக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!
இந்நிலையில், தூத்துக்குடி சிப்காட் தொழில் பூங்காவில் மின்சார வாகன தயாரிப்பில் முன்னணி வகிக்கும் வின்ஃபாஸ்ட் நிறுவனம் ரூ.16,000 கோடி முதலீட்டில் புதிதாக அமைக்க இருக்கும் மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலைக்கு இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். 400 ஏக்கர் பரப்பளவில் இந்த புதிய தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த அடிக்கல் நாட்டு விழாவிற்கு எம்.பி. கனிமொழி, அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், டி.ஆர்.பி. ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.