Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

12:24 PM Feb 23, 2024 IST | Web Editor
Advertisement

நாடாளுமன்ற தேர்தல் பணி குறித்து திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். 

Advertisement

நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில்,  அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான அனைத்து பணிகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில்,  தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்குழு,  தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு.  தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு அமைத்து தேர்தல் பணிகளில் தொடங்கியுள்ளது திமுக.

இதையடுத்து,  நாடாளுமன்ற தேர்தல் பணி தொடர்பாக திமுக மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள்,  தொகுதி பார்வையாளர்களுடன் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.

இதையும் படியுங்கள் : சென்னையில் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை! அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பங்கேற்பு!

காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுகவின் 72 மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், 234 தொகுதி பார்வையாளர்கள் மற்றும் முக்கியமான மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் வெற்றி வாய்ப்பு,  வேட்பாளர் தேர்வு,  கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து மாவட்ட செயலாளர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.

Tags :
CHIEF MINISTERConsultationDMK executivesElection2024MKStalinTamilNadu
Advertisement
Next Article