Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!

நடிகரும் மாநிலங்களவை எம்.பியுமான கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
09:47 AM Nov 07, 2025 IST | Web Editor
நடிகரும் மாநிலங்களவை எம்.பியுமான கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Advertisement

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "பன்முகத்திறமையோடு தமிழ்த் திரையுலகை உலகத் தரத்துக்குக் கொண்டு சென்றிடும் தீராத கலைத்தாகமும் - பன்முகத்தன்மை மிக்க நம் நாட்டை நாசகர பாசிச சக்திகளிடமிருந்து மீட்கும் தணியாத நாட்டுப்பற்றும் கொண்டு, என் மீது அளவற்ற அன்போடு தோழமை பாராட்டும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் - கலைஞானி கமல்ஹாசன் அவர்களுக்கு அன்பு நிறை பிறந்தநாள் வாழ்த்துகள்!

Advertisement

நாடாளும் ஆட்சியாளர்கள் நெறி பிறழாது நடந்திட, நாடாளுமன்றத்தில் முழங்கிடும் தங்களது அரசியல் தொண்டும் - திரையாளும் தங்களது கலைத் தொண்டும் மென்மேலும் சிறந்திட வாழ்த்துகிறேன்"! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
BirthdayCHIEF MINISTERKamal haasanM.K. StalinWishes
Advertisement
Next Article