For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஊரகப் பகுதியில் 'மக்களுடன் முதல்வர்' திட்டம் - தருமபுரியில் இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

07:16 AM Jul 11, 2024 IST | Web Editor
ஊரகப் பகுதியில்  மக்களுடன் முதல்வர்  திட்டம்   தருமபுரியில் இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு க ஸ்டாலின்
Advertisement

 'மக்களுடன் முதல்வர்' என்ற திட்டத்தை ஊரகப் பகுதியில் செயல்படுத்தும் விதமாக தருமபுரியில் இன்று  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

Advertisement

தமிழ்நாடு அரசின் 'மக்களுடன் முதல்வர்' என்ற திட்டம் நகர்ப் புறங்களில் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டம் தற்போது ஊரகப் பகுதியில் உள்ள மக்களுக்காக விரிவுபடுத்தப்பட்டு தொடங்கி வைக்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் தொடக்க விழா தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள பாளையம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இன்று முற்பகல் 11 மணிக்கு நடைபெற உள்ளது.

இன்று நடைபெறும்  விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று திட்டத்தைத் தொடங்கி வைத்து பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெறுகிறார். இதனைத் தொடர்ந்து நடைபெறும் விழாவில் பங்கேற்று அவர் உரையாற்றுகிறார்.

மக்களுடன் முதல்வர் திட்டம் ஏற்கெனவே நகர்ப்புற உள்ளாட்சிப் பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் வெற்றியைத் தொடர்ந்து, ஊரகப் பகுதிகளிலுள்ள உள்ளாட்சிகளிலும் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து மக்களுடன் முதல்வர் திட்ட விரிவாக்கத்தை தருமபுரியில் இன்று அவர் தொடங்கி வைக்கிறார்.

இந்தத் திட்டத்தின் கீழ், மூன்று மாதங்களுக்கு பல்வேறு ஊரகப் பகுதிகளில் முகாம்களை நடத்தி பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதில், எரிசக்தி துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை, வருவாய், பேரிடர் மேலாண் துறை, வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, சமூக நலன், மகளிர் உரிமைத் துறை, ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை, சிறு, குறு நடுத்தர தொழில்நிறுவனங்கள் துறை, கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறை, தொழிலாளர் நலன், திறன்மேம்பாட்டுத் துறை, மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை ஆகிய 15 அரசுத் துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் 44 அரசு திட்டங்களின் சேவைகளுக்கான விண்ணப்பங்களை முகாம்களில் பொதுமக்கள் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement