Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ரூ.1,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத்தொகுப்பை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

10:17 AM Jan 10, 2024 IST | Web Editor
Advertisement

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ரேசன் கடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். 

Advertisement

பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 ரொக்கத்துடன்,  ஒரு கிலோ பச்சரிசி,  ஒரு கிலோ சர்க்கரை,  ஒரு முழுக் கரும்பு உள்ளிட்ட பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதற்கு பொதுமக்கள் ரேசன் கடைகளில் கூட்டமாக கூடி விடக்கூடாது என்பதற்காக டோக்கனும் வழங்கப்பட்டது.  டோக்கனில் குறிப்பிட்ட தேதியில் வந்து பொதுமக்கள் ரூ.1000 ரொக்கப் பணம் மற்றும் பொங்கல் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னை ஆழ்வார்பேட்டை ஸ்ரீராம்நகரில் உள்ள ரேசன் கடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.  இதையடுத்து தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது.

Advertisement
Next Article