For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜன. 28-ம் தேதி ஸ்பெயின் செல்கிறார் - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்!

09:21 PM Jan 08, 2024 IST | Web Editor
முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஜன  28 ம் தேதி ஸ்பெயின் செல்கிறார்   அமைச்சர் டி ஆர் பி ராஜா தகவல்
Advertisement

வரும் ஜன. 28-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் மற்றும் ஆஸ்திரேலியா செல்ல இருப்பதாகவும், அதன் தொடர்ச்சியாக அமெரிக்கா செல்ல இருப்பதாகவும் அமைச்சர் டிஆர்பி.ராஜா தெரிவித்தார்.

Advertisement

தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை பெருக்கவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுக்கவும், சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ஆஸ்திரேலியா உள் பட 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 30000 மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வருகைதந்தனர்.

மாநாடு இன்று நிறைவடைந்ததை அடுத்து தமிழ்­நாடு தொழில்­துறை அமைச்­சர் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழ்நாட்டின் எல்லா பகுதிகளுக்கும் பரவலாக்கப்பட்ட வளர்ச்சியை அளிக்க வேண்டும் இன்று கருதி முதலீடுகளை தமிழ்நாட்டின் தென் பகுதிகளிலும், வடக்கு பகுதிகளிலும், சென்னையிலும் குவிய வைத்தோம் என தெரிவித்தார்.

அத்துடன் வரும் வாரத்தில் கூடுதலாக சில புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருப்பதாகவும், இந்த முதலீடுகள் இரண்டு நாட்கள் மாநாடுடன் முடிவதில்லை எனவும் தெரிவித்தார். இன்னும் பல லட்சம் கோடி முதலீடுகள் தமிழ் நிலத்திற்கு வந்து சேரும் என தெரிவித்த அவர், வரும் ஜன. 28-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் மற்றும் ஆஸ்திரேலியா செல்ல இருப்பதாகவும், அதன் தொடர்ச்சியாக அமெரிக்கா செல்ல இருப்பதாகவும் தெரிவித்தார்.

Tags :
Advertisement