For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
01:17 PM Nov 10, 2025 IST | Web Editor
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு க ஸ்டாலின்
Advertisement

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து, ரூ.203 கோடியில் 103 புதிய திட்டப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். இதையடுத்து உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகள் வெளியிட்டார். அவை பின்வருமாறு,

Advertisement

புதுக்கோட்டை அறந்தாங்கி நீலகொண்டான் ஏரி உள்ளிட்ட முக்கிய ஏரிகள் ரூ.15 கோடியில் புனரமைக்கப்படும்.

கீரமங்கலம் பகுதியில் விவசாய விளைபொருட்களுக்கான குளிர்பதன கிடங்கு ரூ.1 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புதுக்கோட்டையில் டைடல் பார்க் அமைக்கப்படும்.

ஆவுடையார்கோவில் ஊராட்சி, வடகாடு ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் ரூ.10 கோடியில் உயர்மட்ட பாலங்கள் கட்டப்படும்.

கந்தவர்கோட்டை பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.

கீரமங்கலத்தில் காய்கறிகளை பாதுகாக்க ரூ.1.60 லட்சம் மதிப்பீட்டில் குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும்.

Tags :
Advertisement