Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் ரஜினி, கமல் நலம் விசாரிப்பு!

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ள, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் ஆகியோர் நலம் விசாரித்தனர்.
07:44 PM Jul 21, 2025 IST | Web Editor
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ள, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் ஆகியோர் நலம் விசாரித்தனர்.
Advertisement

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை முதல்வர் மு.க. ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டபோது அவருக்கு சேலான தலைச்சுற்றல் ஏற்பட்டுள்ளது. எனினும், அவர் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற அதிமுக முன்னாள் எம்பி அன்வர் ராஜா, திமுகவில் இணையும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

Advertisement

அதைத் தொடர்ந்து முதலமைச்சர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன. மருத்துவர்கள் தரப்பில், முதல்வர் ஸ்டாலின் 2 நாள்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து முதல்வர் கலந்துகொள்ளவிருந்த அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் அடுத்த 2 நாள்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார். தொலைபேசி மூலம் பேசிய அவர்  முதலமைச்சர் விரைவில் நலமுடன் வீடு திரும்ப விரும்புவதாக தெரிவித்தார்.

அதேபோல், நடிகரும் மநீம கட்சியின் தலைவருமான, கமல்ஹாசன் அவர்கள் அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு முதல்-அமைச்சரை நலம் விசாரித்தார். உடல்நலகுறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை  கமல் ஹாசன் அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார் என்று மக்கள் நீதி மய்யம்  கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :
cmhealthconditionKamalhassanlatestNewsMKStalinRajiniTNnews
Advertisement
Next Article