Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் #MKStalin!

10:11 AM Aug 24, 2024 IST | Web Editor
Advertisement

பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Advertisement

தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 'அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு' பழனியில் இன்று தொடங்கியது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்ப்பேட்டை சித்ரஞ்சன் சாலையில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் இருந்து கானொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். பழனி அனைத்துல முத்தமிழ் முருகன் மாநாட்டையொட்டி 100 அடி உயர கம்பத்தில் கொடியேற்றப்பட்டது. ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் கொடியினை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர் பாபு, ஐ.பெரியசாமி, சக்கரபாணி உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

பழனியாண்டவர் கலை-பண்பாட்டு கல்லூரி மைதானத்தில் இந்த மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் 'தமிழ்க்கடவுள் முருகனின்' சிறப்பை உலகறிய செய்ய வேண்டும் என்பதற்காக முருகன் வழிபாட்டு சிறப்புகள், இலக்கிய சிறப்புகள் குறித்து 1,300 கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படுகிறது. இதற்காக உலகம் முழுவதும் இருந்து தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள் தங்களது கட்டுரைகளை பதிவு செய்துள்ளனர். மாநாட்டில் விழா மலர், ஆய்வு மலர் என 2 மலர்கள் வெளியிடப்படுகிறது. மாநாட்டுக்காக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அமரும் வகையில் பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கட்டுரைகளை சமர்ப்பிப்பதற்காக முருகனின் புகழ் பரப்பிய சமய சான்றோர்கள் பெயரில் ஆய்வு அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் மாநாட்டுக்கு வரும் பொதுமக்கள், பக்தர்கள் கண்டு களிக்கும் வகையில் முருகனின் சிறப்புகள் குறித்த கண்காட்சி அரங்கங்களும் அமைக்கப்பட்டு உள்ளன. மாநாட்டுக்கு வரும் பக்தர்களுக்கு முருகனின் ராஜ அலங்கார படம், திருநீறு, குங்குமம், 200 கிராம் பஞ்சாமிர்தம், கந்தசஷ்டி புத்தகம், லட்டு, முறுக்கு ஆகியவை அடங்கிய தொகுப்புகளுடன் கூடிய பிரசாத பைகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக 60 ஆயிரம் பிரசாத பைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

Tags :
CM MK StalinMurugan MaanaduMurugan Muthamizh MaanaduPALANI
Advertisement
Next Article