Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

உதகையில் அரசு மருத்துவமனையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

உதகையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
10:50 AM Apr 06, 2025 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

Advertisement

இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் உதகை அருகே பிங்கர் போஸ்ட் பகுதியில் ரூ.494.51 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மருத்துவ ஊழியர்களுக்கான குடியிருப்பு கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்த மருத்துவமனை 40 ஏக்கர் பரப்பளவில், 700 படுக்கை வசதிகள், எலும்பு முறிவு, காச நோய், தீக்காயம் உள்ளிட்ட 21 துறைகள் உள்ளடங்கிய நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவனையின் பரப்பளவு வரைப்படம் மற்றும் மருத்துவமனை வளாகத்தை அமைச்சர்களுடன் பார்வையிட்டார். முன்னதாக பழங்குடியினரின் பாரம்பரிய நடனத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

Tags :
CHIEF MINISTERgovernmenthospitalinauguratedMKStalinooty
Advertisement
Next Article