ரூ.121.43 கோடி மதிப்பில் 24 புதிய திட்டப் பணிகள் - அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் அலுவலகங்கள், விடுதிகள் உள்ளிட்ட புதிய திட்டப் பணிகள் தொடங்கி விறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற பல திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைப்பதுடன், முடிவுற்ற திட்டப் பணிகளை அவ்வப்போது திறந்து வைத்தும் வருகிறார்.
இதையும் படியுங்கள் : ‘Frame பாருங்க ஜி’ – அதிரடியாக வெளியானது ‘SK 23’ படத்தின் டைட்டில்!
இதற்கிடையே, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ரூ.121.43 கோடி மதிப்பீட்டில் 16 கோயில்களில் 24 புதிய திட்டப் பணிகள் தொடங்கப்பட உள்ளன. இதனை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். மேலும் உதவி ஆணையர் அலுவலகக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டி, ரூ.50.79 கோடி செலவில் 7 திருக்கோயில்களில் 15 முடிவுற்ற திட்டப் பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூரில் வணிக வரி மற்றும் பதிவுத்துறை சார்பில் புதிதாக சார் பதிவாளர் அலுவலகங்கள் கட்டப்பட்டுள்ளன. இதனையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.