Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கோரியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

06:42 PM Jul 22, 2024 IST | Web Editor
Advertisement

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார். அப்போது பிரதமரை சந்திக்க நேரம் கோரப்பட்டுள்ளது.

Advertisement

டெல்லியில் வரும் ஜூலை 27-ம் தேதி நடைபெறும் “நிதி ஆயோக்” ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில், அனைத்து மாநில முதலமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் லெப்டினன்ட் கவர்னர்கள் மற்றும் பல மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், 2047க்குள் நாட்டை வளர்ந்த பொருளாதாரமாக மாற்றுவது, MSMEகள், உள்கட்டமைப்பு மற்றும் முதலீடுகள், இணக்கங்களைக் குறைத்தல், பெண்கள் அதிகாரமளித்தல், சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து, வளர்ச்சி மற்றும் சமூக உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள 2 நாள் பயணமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார். டெல்லியில் உள்ள புதிய தமிழ்நாடு இல்ல கட்டடத்திற்கு 26-ம் தேதி அடிக்கல் நாட்டும் முதலமைச்சர் ஸ்டாலின், 27-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்திலும் பங்கேற்கிறார். இந்நிலையில், வரும் 26-ம் தேதி டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமரை சந்திக்க நேரம் கோரியுள்ளார்.

Tags :
CMO TamilNaduDelhiMK StalinNarendra modiNews7Tamilnews7TamilUpdatesNiti aayogPMO IndiaTamilNadu
Advertisement
Next Article