ஸ்பெயினில் சூரிய உதயத்தை ரசித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - புகைப்படங்கள் இணையத்தில் வைரல்..!
ஸ்பெயின் நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த ஜன.27-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 10 நாள் சுற்றுப்பயணமாக ஸ்பெயின் நாட்டுக்கு சென்றார். ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட் நகரில் நடைபெற்ற ஸ்பெயின் தொழில் அமைப்புகள் மற்றும் ஸ்பெயின் பெரும் தொழில் நிறுவனங்களின் முதலீட்டாளர்கள் மாநாட்டில் (Tamil Nadu Investors First Port of Call) கலந்துகொண்டு, தமிழ்நாட்டில் நிலவும் சாதகமான முதலீட்டுச் சூழல் மற்றும் கட்டமைப்பு வசதிகள் குறித்து எடுத்துரைத்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்து முதலமைச்சர் உரையாற்றினார்.
தொடர்ந்து பல்வேறு தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகளை சந்தித்துப் பேசினார். அதன் விளைவாக தமிழ்நாட்டில் முதலீடு செய்ய பல நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இது ஒருபுறம் இருக்க, ஸ்பெயின் நாட்டில் இருந்தபடியே அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வரும் கட்சிப் பணிகள் குறித்து காணொலி காட்சி வாயிலாக ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறார்.
இதையும் படியுங்கள் : திமுக, அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுக்கள் இன்று சுற்றுப்பயணம்..!
Spain, where dawns are dreams. #SunriseInSpain #Madrid pic.twitter.com/mkHZSdAhbb
— M.K.Stalin (@mkstalin) February 5, 2024
இந்நிலையில் ஸ்பெயின் நாட்டில் சூரியன் உதிக்கும் காலைப் பொழுதில் எடுத்த புகைப்படங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உயரமான கட்டடத்தில் இருந்து ஸ்பெயினை பார்த்து ரசிப்பது போன்ற முதலமைச்சரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.