For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

படையப்பா பட மீம் டெம்ளேட்டை பகிர்ந்து மத்திய அரசு மீது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சனம்!

படையப்பா படத்தின் மீம் டெம்ளேட்டை பகிர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசை விமர்சனம் செய்துள்ளார்.
04:17 PM Jun 14, 2025 IST | Web Editor
படையப்பா படத்தின் மீம் டெம்ளேட்டை பகிர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசை விமர்சனம் செய்துள்ளார்.
படையப்பா பட மீம் டெம்ளேட்டை பகிர்ந்து மத்திய அரசு மீது முதலமைச்சர் மு க  ஸ்டாலின் விமர்சனம்
Advertisement

மத்திய அரசின் ஆறு திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் நிதி அதிகம் பங்களிக்கப்படுவதாக ஆங்கில நாளிழிதலின் செய்தியை குறிப்பிட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதை படையப்பா படத்தின் மீம் டெம்ளேட்டுட்டுடன் ஒப்பிட்டு விமர்சனம் செய்துள்ளார்.

Advertisement

ஆங்கில நாளிழில் வெளியிட்ட செய்தியின்படி, இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம் (IGNOAPS), இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதியத் திட்டம் (IGNWPS), இந்திரா காந்தி தேசிய ஊனமுற்றோர் ஓய்வூதியத் திட்டம் (IGNDPS), பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)-கிராமம், பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா (PMMSY), ஜல் ஜீவன் மிஷன் (JJM) ஆகிய ஆறு திட்டங்களுக்கு மத்திய அரசை விட மாநில அரசின் நிதி பங்களிப்பு அதிகம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செய்தியையும் அதனுடன் சேர்த்து படையப்பா பட மீம் டெம்ளேட்டையும் பகிர்ந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், “பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும் ஸ்டிக்கரில் பிரதமரின் முகத்தையும் தாங்கிச் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கெல்லாம் அவர்களைக் காட்டிலும் அதிகமாகப் படியளப்பது மாநில அரசுதான்!

படையப்பா படக் 'காமெடி' போல "மாப்பிள்ளை அவர்தான், ஆனால் அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது" எனச் சேலம் அரசுவிழாவில் பேசியிருந்தேன். பேசினேன் என்பதைவிட பேசவேண்டிய நிலைக்கு உள்துறை அமைச்சரின் அடிப்படையற்ற குற்றச்சாட்டால் தள்ளப்பட்டேன் என்றுதான் கூறவேண்டும். அது நாளிதழில் செய்தியாகி, தரவுகளோடு விவரிக்கப்பட்டுள்ளது. இனியாவது, கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு கல்லெறியும் பழக்கத்தை  பாஜக அரசு மாற்றிக்கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Tags :
Advertisement