Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

மாஸ்டர்ஸ் கோப்பை செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
09:47 PM Jun 28, 2025 IST | Web Editor
மாஸ்டர்ஸ் கோப்பை செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Advertisement

உஸ்பெகிஸ்தானின் தாஷ்கென்ட் நகரில் மாஸ்டர்ஸ் கோப்பை செஸ் தொடர் நடைபெற்றது. இதில் இந்தியாவின் 'நம்பர்-1' வீரர் அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உட்பட உலகின் 10 முன்னணி வீரர்கள் பங்கேற்றனர். இந்த தொடரில் 10 சுற்றுகளின் முடிவில் மூன்று வீரர்கள் 5.5 புள்ளிகளை பெற்றனர். இதனால் சாம்பியனை தீர்மானிக்க டைபிரேக்கர் ஆட்டம் நடத்தப்பட்டது.

Advertisement

இரண்டு சுற்றுகளாக நடைபெற்ற டைபிரேக்கரில் 1.5 புள்ளிகளை பெற்று பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். அவருக்கு ரூ.17 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் இந்திய செஸ் வீரர்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளதோடு, சர்வதேச செஸ் தரவரிசையில் குகேஷை (4வது இடத்திலிருந்து 5வது இடம்) பின்னுக்கு தள்ளி 4-வது இடத்திற்கு பிரக்ஞானந்தா முன்னேறியுள்ளார்.

இந்த நிலையில், செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது எக்ஸ் தள பக்கத்தில் கூறுகையில், "உஸ்பெகிஸ்தான் செஸ் சாம்பியன்ஸை வென்று, இந்தியாவின் முதல் தரவரிசையில் கிளாசிக்கல் வீரராகவும், சர்வதேச செஸ் தரவரிசையில் நம்பர் 4 வீரராகவும் உயர்ந்ததற்கு பிரக்யானந்தாவுக்கு வாழ்த்துகள். ஃபார்மில் ஒரு சாம்பியன், செக்மேட்-ப்ரூஃப் கைகளில் ஒரு எதிர்காலம்" என தெரிவித்துள்ளார்.

Tags :
ChampionChesscm stalinCMO TAMIL NADUMK StalinPragnandaUzbekistan
Advertisement
Next Article