Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் கள ஆய்வு! தங்க நகை பட்டறை தொழிலாளர்களிடம் நிறை, குறைகளை கேட்டறிந்தார்!

08:25 PM Nov 05, 2024 IST | Web Editor
Advertisement

கோவை தங்க நகை பட்டறை தொழிலாளர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் குறை, நிறைகளை கேட்டறிந்து கள ஆய்வில் ஈடுபட்டார்.

Advertisement

தமிழகத்தில் அரசால் செயல்படுத்தப்படும் மக்கள் நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு முறையாக கிடைக்கிறதா? அரசின் வளர்ச்சி பணிகள் சரியாக நடக்கின்றனவா? என்பதை மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் செய்து, நேரில் பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொள்ள போவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

அதன்படி தனது முதல் கள ஆய்வினை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கோவையில் தொடங்கினார்.

இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்ற முதலமைச்சருக்கு, அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து கோவை விளாங்குறிச்சியில் 158 கோடியே 32 லட்சம் ரூபாய் செலவில் 2.94 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பக் கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் இக்கட்டிடத்தில் பல்வேறு நிறுவனங்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான ஆணைகளையும் வழங்கினார்.

இந்த நிலையில், கோவை காந்தி பார்க் கெம்பட்டி காலனியில் உள்ள தங்க நகை பட்டறைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது தங்க நகை செய்பவர்களை சந்தித்து அவர்களின் நிறை, குறைகளை முதலமைச்சர் கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து கோவை சிட்கோ பகுதியில் தொழிலாளர்கள் தங்கும் விடுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். சுந்தராபுரம் - சிட்கோ பகுதியில் தொழிலாளர்கள் தங்கும் விடுதி கட்டப்பட்டு வருகிறது. இன்னும் சில பணிகள் எஞ்சியுள்ள நிலையில், அங்கும் முதலமைச்சர் ஆய்வு செய்தார்.

Tags :
CMOTamilNaduCoimbatorekovaiMKStalinMKStalinCMnews7 tamilTN Govt
Advertisement
Next Article