Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நடிகர் டெல்லி கணேஷ் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

02:12 PM Nov 10, 2024 IST | Web Editor
Advertisement

நடிகர் டெல்லி கணேஷ் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Advertisement

பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷ் ராமாவரத்தில் உள்ள தனது இல்லத்தில் இன்று உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். திரைத்துறை, சின்னத்திரை என பல பரிமாணங்களில் மக்களை மகிழ்வித்த இவரது இழப்பை தாங்கமுடியாத திரையுலக பிரபலங்கள் இவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

திரை பிரபலங்கள் மட்டுமின்றி, அரசியல் கட்சி தலைவர்களும் டெல்லி கணேஷ் மறைவிற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியும், சமூக வலைத்தளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்தும் வருகின்றனர். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் வெளியிட்ட இரங்கல் கடித்ததில் குறிப்பிட்டுள்ளதாவது;

“மூத்த திரைக்கலைஞர் டெல்லி கணேஷ் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன். நாடகத்தில் இருந்து திரைத்துறைக்கு வந்து, தன்னுடைய அடையாளத்தை அழுத்தமாகப் பதித்தவர் டெல்லி கணேஷ் . 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவரது நகைச்சுவைக் காட்சிகள் இன்றளவும் மக்களால் மீண்டும் மீண்டும் பார்க்கப்படும் அளவுக்குச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவராக அவர் திகழ்ந்தார். வெள்ளித்திரை மட்டுமல்லாது சின்னத்திரையிலும் டெல்லி கணேஷ் பல தொடர்களில் நடித்து முத்திரை பதித்துள்ளார்.

கருணாநிதியின் எழுத்தில் உருவான இளைஞன் திரைப்படத்திலும் டெல்லி கணேஷ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்த் திரைத்துறை வரலாற்றில் நீண்டகாலம் நிலைத்து நிற்கும் பல நகைச்சுவை, குணச்சித்திரப் பாத்திரங்களில் நடித்தவரான அவரது மறைவு திரையுலகிற்குப் பேரிழப்பாகும். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தார்க்கும், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
actorCMO TamilNaduDelhi GaneshMK Stalin
Advertisement
Next Article