For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தூத்துக்குடியில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு! பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார்!

01:24 PM Dec 21, 2023 IST | Web Editor
தூத்துக்குடியில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆய்வு  பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார்
Advertisement

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு நிவாரண பொருள்களை வழங்கினார். 

Advertisement

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவியது.  இதன் காரணமாக திருநெல்வேலி,  தூத்துக்குடி,  கன்னியாகுமரி,  தென்காசி ஆகிய தென்மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது.  குறிப்பாக, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.  தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர்,  காயல்பட்டினத்தில் அதீத மழை பெய்தது.  இந்த கனமழை காரணமாக நெல்லை,  தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன.  தற்போது வெள்ளம் வடிந்து வருகிறது.  இருப்பினும் மக்கள் பாதிப்புகளில் இருந்து மீளவில்லை.  எனவே தொடர்ந்து மீட்பு பணி விரைவாக நடைபெற்று வருகிறது.

இந்த சூழலில் தென் மாவட்ட மழை பாதிப்பு குறித்து சென்னையில் உள்ள அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.  இதில் பாதிப்பு பற்றிய விவரங்கள் மற்றும் நிவாரண பணிகள் குறித்து புகைப்படங்கள் மூலம் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விளக்கமளித்தார்.  மேலும் இந்த ஆய்வில் 4 மாவட்ட ஆட்சியர்களும் காணொளி வாயிலாக பங்கேற்றனர்.

இந்த நிலையில் தென் மாவட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி இன்று (21.12.2023) சென்றடைந்தார்.  பின்னர் பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு செய்து,  பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களையும் வழங்கினார்.

முதற்கட்டமாக புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 600 குடும்பங்களை சந்தித்து அவர்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.  அவருடன் அமைச்சர்கள், தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி மற்றும் உயர் அதிகாரிகள் இருந்தனர்.

Tags :
Advertisement