For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சென்னையில் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை! அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பங்கேற்பு!

10:48 AM Feb 23, 2024 IST | Web Editor
சென்னையில் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை  அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பங்கேற்பு
Advertisement

மக்களவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் சென்னையில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் நடைபெற்று வருகிறது. 

Advertisement

மக்களவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில்  பங்கேற்பதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில் தேர்தல் ஆணையர்கள், ஆணைய அதிகாரிகள் குழுவினர் நேற்று (பிப்- 22) இரவு சென்னை வந்தனர். இதையடுத்து, ஆலோசனை கூட்டம் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையிலான குழுயுடன் மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று (பிப். 23) காலை 10 மணியளவில் தொடங்கியது.

இதையும் படியுங்கள் : 1000 சவரன் தங்க நகைகளை வரதட்சணையாக கேட்டு துன்புறுத்தல் - முன்னாள் எம்.எல்.ஏ. மீது போலீசில் புகார்

மேலும்,  மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ முன்னிலையில்,  மாவட்ட தேர்தல் அதிகாரிகளான சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் இதர மாவட்ட ஆட்சியர்கள்,  காவல் துறை அதிகாரிகள்,  காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் நேரடியாகவும், காணொலியிலும் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

இதையடுத்து,  மக்களவைத் தேர்தல் தொடர்பாக சென்னையில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்,  அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

1.பாஜக
2.காங்கிரஸ்
3.பகுஜன் சமாஜ்
4.ஆம் ஆத்மி
5.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
6.இந்திய கம்யூனிஸ்ட்
7திமுக.
8.அதிமுக
9.தேமுதிக
10.தேசிய மக்கள் கட்சி

ஆகிய 10 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

Tags :
Advertisement