Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மேற்குவங்க டிஜிபி இடமாற்றம்: 6 மாநில உள்துறை செயலாளர்களையும் மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு!

04:22 PM Mar 18, 2024 IST | Web Editor
Advertisement

மேற்கு வங்க டிஜிபி ராஜீவ் குமார் மற்றும் 6 மாநில உள்துறை செயலாளர்களை மாற்றி தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

மக்களவை தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  இந்தியாவில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் ஏற்கனவே 3 ஆண்டுகள் பணிபுரிந்த மாவட்டங்கள் மற்றும் சொந்த மாவட்டங்களில் இருந்து இடமாற்றம் செய்ய அனைத்து மாநில அரசுகளுக்கும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக குஜராத்,  உத்தரப் பிரதேசம்,  பீகார்,  ஜார்க்கண்ட்,  இமாச்சலப் பிரதேசம்,  உத்தரகாண்ட் ஆகிய 6 மாநில உள்துறை செயலாளர்களை மாற்றி தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், மேற்கு வங்க டிஜிபி ராஜீவ் குமாரை இடமாற்றம் செய்தும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  கூடுதலாக, மிசோரம் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் பொது நிர்வாகத் துறையின் செயலாளர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags :
Bengal DGPBiharElection commissionElection2024Gujarathimachal pradeshHome SecretariesJharkhandnews7 tamilnews7 tamil updateOrdersRemovalSeveral Statessix statesuttar pradeshUttarakhandWest bengal
Advertisement
Next Article