சிதம்பரம் - மைசூர் இன்று முதல் நேரடி ரயில் சேவை தொடக்கம்!
சிதம்பரத்தில் இருந்து மைசூருக்கு இன்று முதல் நேரடி ரயில் சேவை தொடங்குகிறது.
சிதம்பரம் ரயில்வே நிலையத்தில் மாலை 4.07 மணிக்கு புறப்பட்டு மைசூா் வரை செல்லும் வகையில் விரைவு ரயில் இன்று (ஜூலை 19) முதல் இயக்கப்பட உள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளதாவது,
"கடலூா் முதுநகரில் இருந்து புறப்படும் விரைவு ரயில், மாலை 4.07 மணிக்கு சிதம்பரம் ரயில் நிலையம் வந்தடையும். இந்த ரயில் கும்பகோணத்துக்கு மாலை 6.35 க்கும், தஞ்சாவூருக்கு 7.10 க்கும், திருச்சிக்கு 8.25 க்கும், கரூருக்கு 9.58 க்கும், ஈரோட்டுக்கு 11.25-க்கும், சேலத்துக்கு நள்ளிரவு 12.27 க்கும், ஓசூருக்கு அதிகாலை 3.33 க்கும், பெங்களூருக்கு காலை 5.40 க்கும், மைசூருக்கு காலை 8 மணிக்கும் சென்றடையும்.
மீண்டும் மைசூரில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்படும் இந்த ரயில், பெங்களூருவுக்கு இரவு 7 மணிக்கும், ஓசூருக்கு இரவு 8.10 க்கும், சேலத்துக்கு இரவு 11.45 க்கும், ஈரோட்டுக்கு நள்ளிரவு 1 மணிக்கும், கரூருக்கு நள்ளிரவு 2 மணிக்கும், திருச்சிக்கு அதிகாலை 4.10 க்கும், தஞ்சாவூருக்கு அதிகாலை 5.05 க்கும், கும்பகோணத்துக்கு அதிகாலை 5.40 க்கும், மயிலாடுதுறைக்கு காலை 6.45 மணிக்கும், சிதம்பரத்துக்கு காலை 7.41 மணிக்கும் வந்து, கடலூா் முதுநகருக்கு காலை 8.35 மணிக்கு வந்தடையும் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகள் இந்த ரயிலை பயன்படுத்திக்கொள்ளுமாறு தெற்கு ரயில்வே நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.