Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"ரயில்வே உணவு பட்டியலில் சிக்கன் ரைஸ் கிடையாது" - கோவை வீராங்கனை உயிரிழப்பு குறித்து ரயில்வே நிர்வாகம் விளக்கம்!

11:12 AM Nov 19, 2024 IST | Web Editor
Advertisement

கோவை வீராங்கனை உயிரிழந்ததாக விவகாரத்தில் ரயில்வே உணவில் சிக்கன் ரைஸ் கிடையாது என ரயில்வே நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Advertisement

கோயம்புத்தூர் சுகுணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராபின் டென்னிஸ் (40). இவருடைய மகள் எலினா லாரெட் (15). தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த எலினா, கூடைப்பந்து வீராங்கனையாகவும் இருந்து வந்தார். பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் கடந்த 8-ம் தேதி முதல் 15-ம் தேதிவரை நடைபெற்றது. இந்த போட்டிகளில் விளையாடுவதற்காக எலினா லாரெட், சக மாணவிகளுடன் ரயிலில் குவாலியர் சென்றார்.

பின்னர் போட்டியை முடித்துவிட்டு கடந்த 16ம் தேதி கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது மாணவி எலினா லாரெட், சக மாணவிகளுடன் சேர்ந்து ரயிலில் சிக்கன் ரைஸ், பர்க்கர் ஆகியவற்றை வாங்கி சாப்பிட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவருக்கு கடும் வயிற்று வலியுடன் கூடிய வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இது தொடர்பாக எலினா லாரெட் சென்னை அண்ணா நகரில் உள்ள தனது உறவினர் டேவிட் வில்லியம்சிடம் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள் : தங்கம் விலை கிடுகிடு உயர்வு! – ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு

ரயில் சென்னை வந்ததும், அவர் எலினாவை அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். சிகிச்சைக்கு பின்னர் எலினா, பெரவள்ளூரில் உள்ள தனது மற்றொரு உறவினர் வீட்டுக்குச் சென்றார். அங்கு சென்ற சிறிது நேரத்தில் எலினாவுக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டது. இதில் அவர், அங்கேயே மயங்கி கீழே விழுந்தார். உடனே அவருடைய உறவினர்கள் எலினாவை பெரவள்ளூரில் உள்ள பெரியார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், எலினா ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தகவலறிந்த பெரவள்ளூர் காவல்துறையினர், அங்கு விரைந்து சென்று எலினா உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக பெரவள்ளூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் கோவை வீராங்கனை ரயில் உணவை சாப்பிட்டு உயிரிழந்ததாக எழுந்த குற்றச்சாட்டுக்கு ரயில்வே நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ரயில்வே நிர்வாகம் அளித்த விளக்கத்தில் தெரிவித்துள்ளதாவது :

"கடந்த 15-ம் தேதி மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் இருந்து கிளம்பிய விரைவு ரயிலில் பயணித்த கோவையை சேர்ந்த பள்ளி மாணவி எலினா சாப்பிட்டதாக கூறப்படும் சிக்கன் ரைஸ் ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) விநியோகிக்கும் உணவுப்பட்டியலில் கிடையாது"

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.

Tags :
AthleteChicken RiceCoimbatoreNews7Tamilnews7TamilUpdatesRailway administrationrailway food
Advertisement
Next Article