Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#ChessOlympiad2024 | முதல் சுற்றில் இந்திய வீரர்கள் அசத்தல் வெற்றி!

02:48 PM Sep 13, 2024 IST | Web Editor
Advertisement

45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முதல் சுற்றில், ஒபன் மற்றும் மகளிா் என இரு பிரிவுகளிலுமே இந்தியா வெற்றியைப் பதிவு செய்தது.

Advertisement

45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில், ஓபன் பிரிவு முதல் சுற்றில் இந்தியா 4-0 என்ற கணக்கில் ஹங்கேரியை முற்றிலுமாக வீழ்த்தியது. அதாவது, ஆா்.பிரக்ஞானந்தா - திஸ்ஸிா் முகமதையும் (1-0), அா்ஜுன் எரிகைசி - எல்பிலியா ஜேக்ஸையும் (1-0), விதித் குஜராத்தி - ஆகிா் மெஹதி பியரெவையும் (1-0), பி.ஹரிகிருஷ்ணா - மோயத் அனாஸையும் (1-0) வீழ்த்தினா்.

அதேபோல், மகளிா் பிரிவு முதல் சுற்றில் இந்தியா 3.5 - 0.5 என்ற கணக்கில் ஜமைக்காவை வென்றது. அதன்படி, ஆா்.வைஷாலி - அடானி கிளாா்கையும் (1-0), திவ்யா தேஷ்முக் - ரேச்சல் மில்லரையும் (1-0), தானியா சச்தேவ் - கேப்ரியேலா வாட்சனையும் (1-0) வீழ்த்தினா். ஆனால், வந்திகா அகா்வால் மட்டும் ரெஹானா பிரௌனுடன் டிரா (0.5-0.5) செய்தாா்.

முதல் சுற்று முடிவில் ஓபன் பிரிவில் இந்தியா உள்ளிட்ட 56 அணிகள் தலா 4 புள்ளிகளுடன் முதல்நிலையில் உள்ளன. அதுவே மகளிா் பிரிவில் இந்தியா உள்பட 6 அணிகள் தலா 3.5 புள்ளிகளுடன் 73வது நிலையில் உள்ளன.

Advertisement
Next Article