சென்னை : மண் சரிவில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள் | 3வது நாளாக தொடரும் மீட்கும் பணிகள்!
09:09 PM Dec 06, 2023 IST
|
Web Editor
Advertisement
சென்னை வேளச்சேரி 5 பர்லாங்க் பகுதியில் மண்சரிவில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்களை மீட்கும் பணி 3வது நாளாக தொடர்ந்து நடைபெற்றது.
Advertisement
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. அப்போது வேளச்சேரி 5 பர்லாங்க் பகுதியில் கட்டுமானத்திற்கு குழிதோண்டும் பணி நடைபெற்ற நிலையில், மண் சரிவு ஏற்பட்டது.
இதில் சிக்கிய 4 தொழிலார்களில் 2 பேர் மீட்கப்பட்ட நிலையில், மேலும் 2 பேரை மீட்கும் முயற்சியில் தீயணைப்பு துறையினர் 3வது நாளாக ஈடுபட்டுள்ளனர். தொழிலாளர்களை மீட்கும் பணிகளை அமைச்சர் எ.வ. வேலு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அமைச்சரிடம் தொழிலாளர்களின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை அமைச்சர் சமாதானம் செய்தார். மண் சரிவில் சிக்கியுள்ள தொழிலாளர் ஒருவரின் மனைவி 9 மாத கர்ப்பிணியாக உள்ளார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
Next Article