For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Chennai | அதிரடியாக எகிறிய முருங்கைக்காய் விலை... 1 கிலோ ரூ.400-க்கு விற்பனை!

02:18 PM Dec 05, 2024 IST | Web Editor
 chennai   அதிரடியாக எகிறிய முருங்கைக்காய் விலை    1 கிலோ ரூ 400 க்கு விற்பனை
Advertisement

சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.400 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

அன்றாட உணவில் முருங்கைக்காய் மிக முக்கியமான காய்கறிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் திண்டுக்கல் ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் பகுதிகளில் அதிகமாக முருங்கை சாகுபடி செய்யப்படுகிறது. ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் இருந்து கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

மகாராஷ்டிராவின் நாசிக் மற்றும் குஜராத்தில் இருந்தும் தமிழ்நாட்டின் பல சந்தைகளுக்கு முருங்கைக்காய் கொண்டு வரப்படுகிறது. தற்போது மழை காலம், பனிப்பொழிவு என்பதால் முருங்கை வரத்து வெகுவாக குறைந்துள்ளது. முருங்கை பிஞ்சுகள் கீழே உதிர்ந்து விழுவதால் முருங்கை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வரத்து குறைந்து வருவதால் கோயம்பேடு, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட சந்தைகளில் முருங்கைக்காய் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று ஒரு முருங்கைக்காய் விலை ரூ.50 முதல் ரூ.55 வரை விற்பனை செய்யப்படுகிறது.

1 கிலோ முருங்கைக்காய் ரூ.400 வரை விற்பனையாகிறது. சில்லரை விற்பனையில் 1 கிலோ முருங்கைக்காய் ரூ.500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக ரூ.250 முதல் ரூ.350 வரை விற்பனையான ஒரு கிலோ முருங்கைக்காய் இன்று ரூ400 -க்கு விற்பனையாவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
Advertisement