சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ஜெர்சி வெளியீடு!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ஜெர்சி வெளியிடப்பட்டுள்ளது.
கிரிக்கெட் விளையாட்டில் நாடு கடந்து ரசிகர்களை கொண்டது ஐபிஎல் தொடர். ஐபிஎல் போட்டிகளில் அனல் பறப்பதால் ஒவ்வொரு வருடமும் இத்தொடரை கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றனர். ஐபிஎல் போட்டியில் பங்கேற்க ஒவ்வொரு அணிக்கும் வீரர்கள் ஏலம் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இதனால் வீரர்கள் அணி மாறுவதும், அதிரடி மாற்றங்கள் நிகழ்வதும் வாடிக்கையானது. இதனிடையே ஐபிஎல் 2024-ம் ஆண்டுக்கான மினி ஏலம் துபாயில் நடைபெற்றது. அதன்படி இந்த சீசனுக்கான ஏலத்திலும் அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது. 5 முறை கோப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மூன்று உள்நாட்டு வீரர்களையும், மூன்று வெளிநாட்டு வீரர்களையும் ஏலம் எடுத்தது.
ரச்சின் ரவீந்திரா (1.8 கோடி), ஷர்தூல் தாகூர் (4 கோடி), டேரில் மிட்செல் (14 கோடி), சமீர் ரிஸ்வி (8.40 கோடி), முஷ்பிகுர் ரஹ்மான் (2 கோடி), அவனிஷ் ராவ் ஆரவல்லி (20 லட்சம்) ஆகியோரை இந்த 17ஆவது சீசனுக்கான மினி ஏலத்தில் சிஎஸ்கே வாங்கியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் ஸ்பான்சர் செய்து வந்தது. ஆனால் தற்போது சிஎஸ்கே அணியின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சராக முன்னனி நிறுவனமான எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனம் இணைந்துள்ளது. இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ஜெர்சி வெளியிடப்பட்டுள்ளது.