Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சென்னை புறநகர் ரயில்கள் நாளை #Sunday அட்டவணைப்படி இயங்கும் - #SouthernRailway அறிவிப்பு!

04:33 PM Nov 01, 2024 IST | Web Editor
Advertisement

சென்னையில் இயங்கி வரும் புறநகர் ரயில்கள் நாளை ஞாயிற்றுக் கிழமை அட்டவணைப்படி இயங்கும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

Advertisement

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு செல்லும் லட்சக்கணக்கான பயணிகள் தினமும் ரயில் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். அந்த ரயிலில் பெண்களுக்கான தனி பெட்டிகள் மற்றும் முதல் வகுப்பு பெட்டிகளும் உள்ளன. சென்னை புறநகர் பகுதியை இணைப்பதில் மின்சார ரயில் சேவை முக்கிய பங்கு வகிக்கிறது.

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, வேளச்சேரி, கும்மிடிப்பூண்டி, திருத்தனி உள்ளிட்ட வழித்தடங்களில் நாள்தோறும் 700 ரயில்களுக்கு மேல் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் கடற்கரை ரயில் வழித்தடத்திலிருந்து சென்னை கடற்கரை – வேளச்சேரி , சென்னை கடற்கரை செங்கல்பட்டு, சென்னை கடற்கரை - தாம்பரம் ஆகிய பகுதிகளுக்கும் இதேபோல சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் மற்றும் சென்னை சென்ட்ரல் - சூலூர்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு பலர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ள நிலையில் பல கல்வி நிலையங்கள் மற்றும் தொழில் மற்றும் ஐடி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அதன் காரணமாக ரயில் சேவை மாற்றம் செய்து ரயில்வே நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் மற்றும் சென்னை சென்ட்ரல் - சூலூர்பேட்டை மற்றும் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படக்கூடிய புறநகர் ரயில் சேவைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என தெனக்க ரயில்வே தெரிவித்துள்ளது.

Tags :
Chennai Beachchennai centralsouthern railwaySub Urban TrainsSunday Pattern
Advertisement
Next Article