For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சென்னை ஓபன் டென்னிஸ் - இறுதி போட்டியில் மோதும் சுமித் நாகல் - லூகா நார்டி!

09:15 AM Feb 11, 2024 IST | Web Editor
சென்னை ஓபன் டென்னிஸ்   இறுதி போட்டியில் மோதும் சுமித் நாகல்   லூகா நார்டி
Advertisement

சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் தொடரில், ஒற்றையர் இறுதிப் போட்டியில்  இந்தியாவின் சுமித் நாகலும், இத்தாலி வீரர் லூகா நார்டியும் மோத உள்ளனர்.

Advertisement

தமிழ்நாடு டென்னிஸ் சங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துடன்
இணைந்து சர்வதேச டென்னிஸ் சென்னை ஓபன் ATP சேலஞ்சர்ஸ் 100 புள்ளிகளுக்கான
டென்னிஸ் தொடர், சென்னை நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டு அரங்கில் கடந்த
ஐந்தாம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் 14 நாடுகளை சேர்ந்த வீரர்கள்
விளையாடினர். இந்தியாவை பொறுத்தவரை சமீபத்தில் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்
தொடரின் இரண்டாம் சுற்று வரை முன்னேறிய, இந்திய வீரர் சுமித் நாகல் உட்பட 14
வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற இரட்டையர் பிரிவில் இறுதி போட்டியில்
இந்தியாவின் சாகேத் மைனேனி - ராம்குமார் ராமநாதன், ரித்விக் சௌத்ரி - நிக்கி கலியாண்ட பூனச்சா உடன் மோதினர். இதில் முதல் இரண்டு செட்டை இருவரும் மாறி மாறி கைப்பற்றினர். பரபரப்பாக நடைபெற்ற மூன்றாவது செட்டை சாகேத் மைனேனி - ராம்குமார் ராமநாதன் இணை கைப்பற்றியது. இறுதியில் 3-6, 6-3, 10-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய சாகேத் மைனேனி - ராம்குமார் ராமநாதன் இணைக்கு கோப்பையுடன் 6.30 லட்சம் பரிசு தொகையும் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, நடைபெற்ற ஒற்றையர் பிரிவில் முதல் அரையிறுதி ஆட்டத்தில்
இந்தியாவின் சுமித் நாகல், செக் குடியரசின் டலிபார் ஸ்வர்சினா மோதினர்.இதில்
சுமித் நாகல் 6-3,6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு
முன்னேறினார்.மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் இத்தாலியின் லூகா நார்டி சீன
தைபேயின் சுன் ஹுசினை 6-4,4-6,7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதி
போட்டிக்கு முன்னேறினார்.

இன்று நடைபெறும் இறுதி போட்டியில் இந்தியாவின் சுமித் நாகலும், இத்தாலியின் லூகா
நார்டியும் மோதுகின்றனர்.

Tags :
Advertisement