For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தேசிய விருது பெற்ற சென்னை மாநகர போக்குவரத்துகழகம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!

சென்னை மாநகர போக்குவரத்துகழகத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
09:32 AM Nov 10, 2025 IST | Web Editor
சென்னை மாநகர போக்குவரத்துகழகத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தேசிய விருது பெற்ற சென்னை மாநகர போக்குவரத்துகழகம்   முதலமைச்சர் மு க ஸ்டாலின் பாராட்டு
Advertisement

தேசிய விருது பெற்ற சென்னை மாநகர போக்குவரத்துகழகத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "A city’s living standards are reflected in the reliability and quality of its public transport. இந்தியாவிலேயே சிறந்த பொதுப் போக்குவரத்து அமைப்பைக் கொண்ட நகரம் என விருது பெற்றுள்ள சென்னை மாநகர போக்குவரத்துகழகத்துக்கும், துறைக்குப் பொறுப்பேற்று வழிநடத்தும் அமைச்சர் சிவசங்கருக்கும் பாராட்டுகள்.

Advertisement

நள்ளிரவிலும் பாதுகாப்பான பயணம், டிஜிட்டல் பயணச்சீட்டு முறைகள், தாழ்தள மின்சாரப் பேருந்துகள் என நாளுக்கு நாள் மெருகேறி வரும்சென்னை மாநகர போக்குவரத்துகழகம், பயணிகளின் தேவையறிந்து, சீரான இடைவெளியில் தொடர்ந்து பேருந்துகளை இயக்கிச் சிறந்திட வாழ்த்துகிறேன்"! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement