ஊழியர்களுக்கு கார், ராயல் என்ஃபீல்டு பைக்குகளை பரிசளித்த நிறுவனம்... எங்கு தெரியுமா?
சென்னையை சேர்ந்த தனியார் நிறுவன இயக்குநர் தனது ஊழியர்களுக்கு கார் மற்றும் ராயல் என்ஃபீல்டு பைக்குகளை பரிசாக வழங்கியுள்ளார்.
சென்னை சேத்துப்பட்டில் கடந்த 2022ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிறுவனம் சர்மவுண்ட் லாஜிஸ்டிக்ஸ் சொலியூஷன்ஸ். இத்தனியார் நிறுவனம் கப்பல் மற்றும் தளவாடத் துறையில் நுழைந்த 2 ஆண்டுகளில் பல சாதனைகளை படைத்துள்ளது. நிறுவனத்தின் அசாத்திய வணிக
வெற்றிக்கு ஊழியர்கள்தான் முதன்மைக் காரணம் என்பதை அறிந்த நிர்வாக இயக்குனர் டென்சில் ராயன், மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் 20 ஊழியர்களுக்கு கார்கள்,
ஸ்கூட்டர்கள் மற்றும் ராயல் என்ஃபீல்டு பைக் உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளார்.
ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் இது போன்று தங்களது ஊழியர்களை கௌரவிக்கும் மனிதவள கொள்கை கொண்டிருப்பது மிகவும் அரிதானது. அதனை டென்சில் ராயனின் சர்மவுண்ட் லாஜிஸ்டிக்ஸ் சொலியூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் நிகழ்த்திக் காட்டியுள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த டென்சில் ராயன்,
கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட எங்கள் நிறுவனத்தின் பணியாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கார், பைக்குகள் ஆகியவற்றை பரிசாக வழங்கி உள்ளோம். நான் ஒரு நிறுவனத்தில் 19 ஆண்டுகள் பணியாற்றிய போது எனக்கு ஏராளமான எதிர்பார்ப்புகள் இருந்தது. அதில் பல நிறைவேறவில்லை. அத்தகைய எதிர்ப்பார்ப்புகள் எங்கள் பணியாளர்களுக்கு இருக்காமல் இருக்க அவர்களுக்கு பரிசுகள் வழங்கி உள்ளோம். மொத்தம் 25 லட்சம் மதிப்பிலான வாகனங்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளன. பணியாளர்களை அங்கீகரிக்கும் வகையில் இந்த பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.