சென்னை கோயம்பேடு பேருந்து கடத்தல் - ஆந்திராவில் மீட்பு
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் கோயம்பேட்டில் இருந்து திருப்பதிக்கு செல்ல வேண்டிய அரசு பேருந்து திருடப்பட்டது. இதனை தொடர்ந்து கிளை மேலாளர் ராம்சிங் உடனடியாக கோயம்பேடு சி. எம் பி. டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் போலீசார் காணாமல் போன பேருந்தை தேட தொடங்கினர். இதனைடையே காணாமல் போன பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த ஜி.பி.எஸ் கருவியை ஆய்வு செய்ததில் பேருந்து ஆந்திர மாநிலம் நெல்லூரில் சென்று கொண்டிருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து கோயம்பேடு போலீசார் நெல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
இந்த தகலையடுத்து நெல்லூர் மாவட்டத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த அரசு பேருந்தை அடையாளம் மடக்கிப்பிடித்தனர். தொடர்ந்து பேருந்தை ஓட்டி சென்ற நபரையும் பேருந்தையும் பிடித்து கோயம்பேடு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இது குறித்தான விசாரணையில் பேருந்தை திருடியவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஞான ராம் (வயது 24) என்பது தெரியவந்துள்ளது. போலீசார் விசாரணைக்கு பிறகு அவர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பெயரில் அந்நபரை காவல்துறையினர் புழல் சிறையில் அடைத்தனர்