For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் பேருந்துகளின் பட்டியல்!

12:15 PM Jan 01, 2024 IST | Web Editor
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் பேருந்துகளின் பட்டியல்
Advertisement

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திலிருந்து தற்போது செல்லக் கூடிய பேருந்துகளின் முழுவிவரங்களை பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்வதற்காகவும் கிளாம்பாக்கத்தில்  88 ஏக்கர் பரப்பளவில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் டிசம்பர் 30 ஆம் தேதி காலை 11 மணிக்கு திறந்து வைத்தார்.

இதையும் படியுங்கள் : வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு!

இந்நிலையில், 28.25 ஏக்கர் பரப்பளவில் வாகன நிறுத்துமிடம், கடைகள், உணவகங்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது. சிசிடிவி கேமராக்கள், முழு குளிர்சாதன வசதி, மழை நீர் வடிகால்கள், சூரிய தகடுகள், 2,285 பார்க்கிங் வசதிகள், 500 தனியார் பேருந்து நிறுத்துமிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திலிருந்து தற்போது செல்லக்கூடிய பேருந்துகளின் முழுவிவரங்களை பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் கோட்டம்

விழுப்புரம் கோட்டத்தை பொருத்தவரையில் மேல்மருவத்தூர், திண்டிவனம்,
கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருக்கோவிலூர், போளூர், வந்தவாசி, புதுச்சேரி ஆகிய
பகுதிகளுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்து
செல்லும்.

மேலும், விழுப்புரம்,திண்டிவனம், வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை, புதுச்சேரி, விருதாச்சலம், பெரம்பலூர், அரியலூர், திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய சில பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும்.

சேலம் கோட்டம்

சேலம் கோட்டம் பேருந்துகளை பொறுத்தவரையில் அதிக அளவிலான பேருந்துகள் சென்னை கோயம்பேட்டில் இருந்து இயங்கி வருகின்றன. இந்நிலையில், ஆத்தூர்,பள்ளப்பட்டி, ஓமலூர், ராசிபுரம், நாமக்கல் ஆகிய பகுதிகளுக்குச் செல்லும்
பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து புறப்பட்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
வந்து செல்கின்றன.

மேலும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து ஆத்தூர்,ஓமலூர்,நாமக்கல், சேலம் ஆகிய பகுதிகளுக்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள்
செல்கின்றன.

கோயம்புத்தூர் கோட்டம்

கோயம்புத்தூர் கோட்டம் பொருத்தவரையில் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து
பேருந்துகள் இயக்கப்பட்டாலும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்தே பேருந்துகள் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து கோயம்புத்தூர் கோட்டத்தில் S.E.T.C குன்னூர் ஊட்டி பேருந்துகளும், கோயம்புத்தூர் ஈரோடு ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகளும் செல்லும்.

கும்பகோணம் கோட்டம்

சென்னை கோயம்பேட்டில் இருந்து விழுப்புரம் வழியாக செல்லக்கூடிய
மார்த்தாண்டம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, காரைக்குடி, தேவகோட்டை,
ராமேஸ்வரம், ஏர்வாடி, சாயல்குடி, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளுக்கு செல்லக்கூடிய
பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்து செல்லும்.

திருச்சி புதுக்கோட்டை நாகப்பட்டினம் காரைக்கால் புதுச்சேரி திருவாரூர்
திருத்துறைப்பூண்டி கும்பகோணம் தஞ்சாவூர் ஆகிய பகுதிகளுக்கு செல்லக்கூடிய
பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து செல்லும்.

திருநெல்வேலி கோட்டம்

சென்னை கோயம்பேட்டில் இருந்து திருநெல்வேலி கோட்டத்திற்கு தூத்துக்குடி,
திருநெல்வேலி, திண்டுக்கல், மதுரை, திருச்செந்தூர்,கன்னியாகுமரி, நாகர்கோயில் ஆகிய
பகுதிகளுக்கு S.E.T.C பேருந்துகள் செல்கின்றன. கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வழியாக இந்த பேருந்துகள் இயக்கப்படும்.
அதனைத்தொடர்ந்து, திருச்செந்தூர், மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளுக்கு கிளாம்பக்கத்தில் இருந்தும் பேருந்துகள் செல்லும்.

அதனைத்தொடர்ந்து, S.E.T.C, தமிழ்நாடு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பேருந்து பயணிகளின் வசதிக்காக கூடுவாஞ்சேரியில் இருந்து பிராட்வே பகுதிக்கு
இயக்கப்படும் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்து செல்லவும்,
தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வருகின்ற மாநகரப் பேருந்துகள்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே நின்று செல்லவும் வழிவகை
செய்யப்பட்டுள்ளன.

Tags :
Advertisement