For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#ChennaiGrandMasters2024 | சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் - டிக்கெட் புக்கிங் தொடக்கம்!

03:09 PM Nov 03, 2024 IST | Web Editor
 chennaigrandmasters2024   சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடர்   டிக்கெட் புக்கிங் தொடக்கம்
Advertisement

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடருக்கான டிக்கெட் புக்கிங் தொடங்கியுள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் வளாகத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியை ஃபிடே ஆதரவுடன் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்துகிறது. இம்முறை போட்டிகள் மாஸ்டர்ஸ், சாலஞ்சர்ஸ் என இரு பிரிவுகளில் நடத்தப்பட உள்ளது. மாஸ்டர்ஸ் பிரிவில், சமீபத்தில் டபிள்யூ.ஆர் செஸ் மாஸ்டர்ஸ் கோப்பையை வென்ற உலகத் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜுன் எரிகைசி (2,797) 2-வது முறையாக கலந்து கொள்கிறார்.

அவருடன், அமெரிக்க கிராண்ட் மாஸ்டர் லெவோன் அரோனியன் (2,738), பிரான்ஸ் கிராண்ட் மாஸ்டர் மாக்சிம் வாச்சியர் லாக்ரேவ் (2,735), ஈரான் கிராண்ட் மாஸ்டர்களான பர்ஹாம் மக்சூட்லூ (2,719), அமீன் தபதாபேயி (2702), ரஷ்யா கிராண்ட் மாஸ்டர் அலெக்ஸி சரானா (2,717), இந்திய கிராண்ட் மாஸ்டர்களான விதித் குஜ்ராத்தி (2,726), அரவிந்த் சிதம்பரம் (2,698) ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

இந்த நிலையில், சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடருக்கான டிக்கெட் புக்கிங் தொடங்கியுள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது,

"சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2024 போட்டிகள் நாளை மறுநாள் (நவ.5) முதல் 11 ஆம் தேதி வரை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறுகிறது. மாஸ்டர்ஸ் மற்றும் சேலஞ்சர்ஸ் ஆகிய இரு பிரிவுகளிலும் வீரர், வீராங்கனைகள் பங்கேற்று அவர்களின் திறமையை வெளிப்படுத்த உள்ளனர். 'புக் மை ஷோ' இணையதளத்தில் அல்லது செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம். ஒரு நபருக்கு ரூ. 100 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. செஸ் ஆர்வலர்கள் தங்கள் இருக்கைகளை முன்பதிவு செய்யுங்கள்"

இவ்வாறு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement